we provide tailored solutions that deliver results.
Can you clarify which type of PR services you're looking for?.
Learn More
தொழில் நண்பன்
‘தொழில் நண்பன்’ இதழ் தமிழில் வெளிவரும் தொழில், வணிக, பொருளாதார இதழ்களில் முதன்மையானது மட்டுமல்ல, தனித்துவமானது. தமிழ்நாட்டு இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் அனைவரும் தொழில் சார்ந்த சிந்தனைகளை வளர்த்து, பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வெளி வருகிறது.
மேலும் வேலைவாய்ப்புகள் அருகி வரும் இன்றைய சூழலில் படித்து முடித்து வரும் ஏராளமான இளைய தலைமுறையினருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் தொழில் முனைவோர்களாக பலரை உருவாக்க வேண்டும் என்று நண்பனாக, உற்ற தோழனாக தொழில் நண்பன் இதழை சமூக பொறுப்போடு மிகவும் தரமாக வெளிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். உலகம் முழுவதும் தொழில், வணிக, பொருளாதார தரவுகளைத் தேடித் தேடி வாசகர்களுக்கு புதுமையாகவும், தரமாகவும் வழங்குகின்றோம்.