Public Relations services designed to elevate your brand,

we provide tailored solutions that deliver results.

Can you clarify which type of PR services you're looking for?.

Learn More
img
'மங்கையரின் மறுமலர்ச்சியே; மண்ணுலகின் வளர்ச்சி’

தங்க மங்கை

'மங்கையரின் மறுமலர்ச்சியே; மண்ணுலகின் வளர்ச்சி’ என்பதை இலக்காகக் கொண்டு தங்க மங்கை இதழை இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினோம்.

கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் பெண்கள் அனைவருக்கும் எட்ட வேண்டும் என்ற தாகத்தில் உருவானதுதான் இந்தத் தங்க மங்கை. எங்களுடைய இந்தப் பயணத்தில் பெண் எழுத்தாளர்கள் பலர் வெளி உலகுக்கு அறிமுகமாகி உள்ளனர். சாதனைப் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் பெற துணை நின்றுள்ளோம். பல இலட்சம் பெண் வாசகர்களுக்கு ஊக்கத்தையும், முன்னேற்ற வாய்ப்பையும் இதழ்தோறும் அடையாளம் காட்டி வருகிறோம்.

அறிவுக்கு விருந்தாக சாதனைப் பெண்கள், சரித்திரத்தை மாற்றி அமைத்த பெண்கள், வாழ்வியல் கட்டுரைகள், சமூகம், பொருளாதாரம் சார்ந்த செய்திகள், குடும்ப உறவுகளின் மேன்மைகள், உலகியலுக்கு ஏற்ற உண்மைகள், சட்டம், கல்வி, மருத்துவம், கணிப்பொறி, அறிவியல், வரலாறு, விளையாட்டு, உடற்பயிற்சி, என்று இன்னும் ஏராளமான செய்திகளோடு தங்க மங்கை வெளிவந்து கொண்டிருக்கிறது. பெண்களின் வாசிப்புத் திறனை அதிகப்படுத்த வேண்டும் என்கிற வாசகர்களின் வேண்டுகோளினை ஒட்டியே அண்மைக்கால இதழ்களில் சமூக-அரசியல் பக்கங்களை அதிகரித்தோம். தங்க மங்கையின் மாற்றங்களை வாசகர்கள் மனமகிழ்வோடு வரவேற்கிறார்கள், ஆதரவளிக்கிறார்கள் என்பதை அறிகிறபோது உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறோம்.

'பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டில் மண்ணடிமை மாற்றுவது முயற்கொம்பே' என்றார் புரட்சிக் கவிஞர். அந்த வகையில், இந்த சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் பெண்களுக்கு அடையாளங் காட்டவும், அனைத்துத் துறைகளிலும் பெண்களை அடையாளப்படுத்தவுமான ஒரு பணியை தங்க மங்கை இதழ் முன்னைவிடக் கூடுதலாய், முன்னெடுத்துச் செல்கிறது. அதனால் தங்க மங்கை இதழ் கல்வி, சமூகம், அரசியல் தளங்களிலும் வலுவான பங்களிப்பை வழங்கி வருகிறது. ‘பெண்கள் இதழ்’ என்கிற அடையாளத்தில் இருந்து இன்னும் ஒரு படி முன்னேறி ‘சுய முன்னேற்ற இதழாக’ வலம் வந்து கொண்டிருக்கிறது.

Lifestyle blog
Read more
Technology blog
Read more
Science blog
Read more